சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க வாய்ப்பு: வைரலாகும் விளம்பரம்!

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது என்பதும் இந்த படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 

முதலில் டாக்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும், வரும் டிசம்பர் மாதம் அயலான் திரைப்படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது 

‘டான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை சிபிச்சக்கரவர்த்தி என்பவர் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லி இடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனமும் சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது 

don

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க விரும்புபவர்கள் படக்குழுவினர்களை அணுகலாம் என விளம்பரம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் இந்த விளம்பரம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவையைச் சேர்ந்தவர்கள் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க விரும்பினால் இந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ள இமெயிலை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது

From around the web