அச்சும்மா, இதுதான் உண்மையான அன்பு: நெட்டிசன்களின் கமெண்ட்டுக்கள்!

 

பிக்பாஸ் சீசன் இதுவரை இல்லாத அளவில் அன்பை ஆயுதமாக வைத்து விளையாடிய ஒரே போட்டியாளர் அர்ச்சனா தான் என்று கூறலாம் 

அன்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி ஆறு போட்டியாளர்களை தனது கைக்குள் வைத்துக் கொண்டு அவர்களுடைய தனித்திறமை வெளியாகாமல் செய்த மிகப்பெரிய குற்றவாளியாக பார்வையாளர்கள் பார்க்கப்பட்டு வருகிறார் அர்ச்சனா

நிஷா ரமேஷ் உள்பட ஆகியோர்கள் திறமையானவர்களாக இருந்தும் அர்ச்சனாவின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர்களுடைய தனித்திறமை வெளியே வராமல் போய்விட்டது. இந்த நிலையில் அன்பு ஜெயிக்கும் அன்பு ஜெயிக்கும் என்று ஏமாற்றிக் கொண்டிருந்த அர்ச்சனா இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

archaan

இந்த நிலையில் அர்ச்சனாவின் உண்மையான அன்பு குறித்த ஒரு புகைப்படம் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அர்ச்சனாவின் இளமைக்கால புகைப்படத்தில் அவரது மகள் கைக்குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தில் குழந்தையை தூக்கி கையில் வைத்துக் கொண்டு இருப்பதை பார்க்கும் போதே அன்பு அவரது முகத்தில் தெரிகிறது 

இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் குறிப்பிட்டு இதுதான் உண்மையான அன்பு, நீங்கள் இப்போது பிக்பாஸ் வீட்டில் காண்பித்துக் கொண்டு இருப்பது பெயர் அன்பு அல்ல என்று பதிவு செய்து வருகின்றனர் அர்ச்சனா வெளியே வந்து இந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தாலே அவருக்கே தெரியும் உண்மையான அன்பு எது என்பது என்றும் பதிவாகி வருகின்றன

From around the web