சிம்புவுக்கு கொரோனா வந்தால் தான் தெரியும்: 100% அனுமதி குறித்து கருணாஸ்!

 

திரையரங்குகளில் 100 சதவீதம் அனுமதி அளித்தது தவறு என்றும் 50 சதவீத அனுமதியே போதும் என்றும் நடிகரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவான கருணாஸ் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென 100% அனுமதி என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது 

இதுகுறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் பரவலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த திருவாடனை தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் அவர்கள் கூறியதாவது:

karunas

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீணாகிப் போய் விடக்கூடாது. 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி தந்தால் இப்போதைக்கு போதுமானது. கொரோனாவை வெல்வோம் கொல்வோம் என்று தொற்று வியாதியிடம் வசனம் பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. சிம்புவுக்கு கொரோனா வந்தால்தான் தெரியும், நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளேன், அதனால் தான் இதைப்பற்றி கூறுகிறேன்’ என்று கூறியுள்ளார்

From around the web