50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது என்பதை பார்த்தோம். நடிகர் விஜய் முதல்வரை நேரில் சென்று சந்தித்து வந்ததும் தான் இந்த உத்தரவு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு தமிழக அரசின் இந்த அரசாணைக்கு கண்டனம் தெரிவித்தது. மீண்டும் 50 சதவீத இருக்கைகளுடன் கூடிய புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று மதுரை ஐகோர்ட்டில் நேற்று பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில் வரும் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
மேலும் வரும் 11-ம் தேதிக்குள் தமிழக அரசு இது குறித்து ஆய்வு செய்து நல்ல முடிவை தெரிவிக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும், ஒருவேளை அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் நீதிமன்றமே இது குறித்த உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்பதே நீதிபதிகளின் இந்த எச்சரிக்கையாக இருந்தது.
இதிலிருந்து இப்போதைக்கு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுவதால் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்களின் ரிலீஸ் கேள்விக்குறியாக உள்ளதாக கூறப்படுகிறது