ஆன்லைன் மருந்து விற்பனை- முறைப்படுத்த அரசுக்கு கூடுதல் அவகாசம்

சில காலங்களாக ஆன்லைனில் மருந்து விற்பனை நடைபெற்று வருகிறது. இது முறைப்படி நடக்கிறதா என்று கேட்டால் சரியான பதில் இருக்காது. ஏனெனில் கடையில் ஒரு மருந்தை சீட்டைக்காட்டி நாம் கேட்கும்போது சில நேரங்களில் மாத்திரையை கடைக்காரர் மாற்றி கொடுத்து விடுகிறார்கள். வேறு கம்பெனியின் மருந்தை சில நேரங்களில் தருகிறார்கள். ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் வகையில் புதிய விதிகளை வகுக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிகளை வகுக்க உத்தரவிட்டு, அதுவரை
 

சில காலங்களாக ஆன்லைனில் மருந்து விற்பனை நடைபெற்று வருகிறது. இது முறைப்படி நடக்கிறதா என்று கேட்டால் சரியான பதில் இருக்காது.

ஆன்லைன் மருந்து விற்பனை- முறைப்படுத்த அரசுக்கு கூடுதல் அவகாசம்

ஏனெனில் கடையில் ஒரு மருந்தை சீட்டைக்காட்டி நாம் கேட்கும்போது சில நேரங்களில் மாத்திரையை கடைக்காரர் மாற்றி கொடுத்து விடுகிறார்கள். வேறு கம்பெனியின் மருந்தை சில நேரங்களில் தருகிறார்கள்.

ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் வகையில் புதிய விதிகளை வகுக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிகளை வகுக்க உத்தரவிட்டு, அதுவரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கும் தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆன்லைன் மருந்து விற்பனைக்கான புதிய விதிகளை அறிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதித்த தடையை நீக்கி பிறக்கப்பிட்ட உத்தரவையும் நீதிபதிகள் நீட்டித்து ஆணையிட்டனர்.

From around the web