ஒரு வழியா ’கோப்ரா’ அப்டேட் வந்துருச்சு: சீயான் ரசிகர்கள் உற்சாகம் 

 

சீயான் விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்று கூறலாம். ஆனால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட் வந்த பிறகு வேறு எந்த அப்டேட்டும் வராததால் அஜித் ரசிகர்கள் போலவே விக்ரம் ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலம் ’கோப்ரா’ அப்டேட் எங்கே? என்று கேட்டுக் கொண்டிருந்தனர்

ஒரு சில கோரிக்கைகளுக்கு இயக்குனர் அஜய் ஞானமுத்து பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஒரு வழியாக ரசிகர்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்யும் வகையில் நாளை கிறிஸ்துமஸ் தினத்தில் இந்த படத்தின் இரண்டாவது லுக் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

cobra

நாளை காலை 10 மணிக்கு ’கோப்ரா’ படத்தின் இரண்டாவது லுக் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவரும் என்று அஜய் ஞானமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் எட்டு கெட்டப்பில் விக்ரம் இருந்த நிலையில் இந்த இரண்டாவது லுக்கில் எப்படி இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை அடுத்து, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் விக்ரம் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்பதும் அதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

From around the web