இன்னும் ஒரு மணி நேரத்தில் வாராரு "பேச்சிலர்"!

இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியாக உள்ளது ஜி.வி .பிரகாஷ் நடித்த திரைப்படத்தின் டீசர்!
 
"திங்க் மியூசிக்" தனது ட்விட்டர் பக்கத்தில் "பேச்சிலர்" படத்தின் டீசர் வெளியாகும் நேரத்தை கூறியுள்ளது!

"நடிகர்", "இசையமைப்பாளர் "என இருவேறு முகங்களைக் கொண்டவர் நடிகர் ஜி.வி பிரகாஷ் .இவர் "தளபதி "விஜய்க்கு "தலைவா" என்ற திரைப்படத்தில் இசையமைத்திருந்தார். இவரின் இசையில் வெளியாகிய ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் தளபதி விஜய்க்கு "தெறி" என்ற திரைப்படத்திற்கும்  இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் "அசுரன்". இத்திரைப்படத்தில் "நடிகர் தனுஷ்" நடித்திருப்பார். இத்திரைப்படத்தினை "வெற்றிமாறன்" இயக்கிய இதற்கு "இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்" இசை அமைத்திருந்தார். இவரது இசையில் வெளியான ஒவ்வொரு பாடல்களும் குறிப்பாக ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் மக்களை மெய்சிலிர்க்க வைத்தது.

G.V.Prakash

இயக்குனர் "அட்லி" இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் "ராஜா ராணி". இத்திரைப்படத்தில் "நடிகர் ஆர்யா", "லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா", "நடிகர் ஜெய்" மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜீ.வி. பிரகாஷ்  கதாநாயகனாக "டார்லிங்", "எனக்கு இன்னொரு பேர் இருக்கு"  போன்ற பல படங்களில் நடித்திருந்தார். அந்தப் படங்களும் வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பையும் பெற்று ஜிவி பிரகாஷை "கதாநாயகனாகவும்" மக்கள் ஏற்றுக் கொண்டனர். தற்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "பேச்சிலர்". இப்படத்தின் டீசர் இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியாகும் என "திங்க் மியூசிக்"  தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இதனை காணும் இவரின் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும் ,மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்திற்கு "இவரே கதாநாயகனாகவும், இவரே இசை அமைப்பாளராகவும் "பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web