ஒரு நாள் சம்பளத்துக்கு மாறிய யோகிபாபு

சினிமாவில் அதிர்ஷ்டக்காற்று சில நாட்களுக்குத்தான் வீசும் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கேற்ப வாழ்ந்த நடிகர் நடிகைகள் இருக்கின்றனர். அப்படித்தான் யோகிபாபுவின் சினிமா கேரியரும் கிடுகிடுவென வளர்ந்து வரும் இந்நேரத்தில் மேல் சொன்ன பழமொழிக்கேற்ப செயல்படுகிறார். மிக சாதாரண சம்பளங்களில் நடித்து கொண்டிருந்த யோகிபாபுவின் மார்க்கெட் ஏகத்துக்கும் எகிறி விட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட அவர் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். மும்பையில் நடைபெறும் தர்பார் படப்பிடிப்பில் யோகிபாபு கால்ஷீட் கேட்டு பார்க்க நிறைய தயாரிப்பாளர்கள் காத்துள்ளனராம்.
 

சினிமாவில் அதிர்ஷ்டக்காற்று சில நாட்களுக்குத்தான் வீசும் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கேற்ப வாழ்ந்த நடிகர் நடிகைகள் இருக்கின்றனர். அப்படித்தான் யோகிபாபுவின் சினிமா கேரியரும் கிடுகிடுவென வளர்ந்து வரும் இந்நேரத்தில் மேல் சொன்ன பழமொழிக்கேற்ப செயல்படுகிறார்.

ஒரு நாள் சம்பளத்துக்கு மாறிய யோகிபாபு

மிக சாதாரண சம்பளங்களில் நடித்து கொண்டிருந்த யோகிபாபுவின் மார்க்கெட் ஏகத்துக்கும் எகிறி விட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட அவர் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். மும்பையில் நடைபெறும் தர்பார் படப்பிடிப்பில் யோகிபாபு கால்ஷீட் கேட்டு பார்க்க நிறைய தயாரிப்பாளர்கள் காத்துள்ளனராம்.

யோகிபாபுவும் தற்போது இப்போது படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்பதை விட்டு ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 5 லட்சம் சம்பளம் நிர்ணயித்துள்ளாராம்.

இதனால் யோகிபாபு இல்லாமல் தமிழ் சினிமா இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

From around the web