ஒருநாள் தியானம்: இளையராஜாவின் கோரிக்கைக்கு பிரசாத் ஸ்டுடியோ எடுத்த அதிரடி முடிவு!

 

இசைஞானி இளையராஜா அவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள ஒரு பகுதியில் தனது ரெக்கார்டிங் பணிகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோ நிறுவனம் இளையராஜாவை காலி செய்யக் கூறியது. இதற்கு மறுப்பு தெரிவித்த இளையராஜா நீதிமன்றம் சென்றார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய பொருள்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும் ஏற்கனவே ரெக்கார்டிங் செய்த இடத்தில் ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்கும் படியும் கோரிக்கை விடுத்து சமீபத்தில் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்தார்

ilaiyaraja

இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் கேட்டு பதில் அளிப்பதாக அவருடைய வழக்கறிஞர் தகவல் தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து நீதிபதிகள் கருத்து கூறிய போது இளையராஜா என்பவர் இசையில் பிரபலமானவர் அவரது கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் இருக்கலாமே என்று கருத்து தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில் சற்று முன் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம், இளையராஜா ஒருநாள் தியாகம் செய்ய அனுமதிக்க முடியாது என கூறியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இளையராஜாவுக்கு ஒருநாள் தியானம் செய்ய அனுமதி கிடையாது என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web