ஒரு கோடி நஷ்ட ஈடு! வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிரபல நடிகை; அதிர்ச்சியில் மருத்துவர்!

தவறான முகப்பொலிவு சிகிச்சை செய்வதற்காக டாக்டர் பைரவி செந்திலுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் பிரபல நடிகை ரைசா வில்சன்!
 
ஒரு கோடி நஷ்ட ஈடு! வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிரபல நடிகை; அதிர்ச்சியில் மருத்துவர்!

தனது நடிப்பாலும் தனது அழகாலும் மக்கள் மத்தியில் நல்லதொரு பெயரை பெற்று உள்ளார் நடிகை ரைசா வில்சன். இவர் சில தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்ற மிகவும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளராக களமிறங்கி மக்கள் மத்தியில் நல்லதொரு மதிப்பைப் பெற்றார் நடிகை ரைசா. மேலும் அவர் அதற்கு பின்பு நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த பியார் பிரேமா காதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

raiza

மேலும் அசுரன் நாயகன் தனுஷின் நடிப்பில் வெளியாகிய வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் பணியாற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய திறமைகளைக் கொண்ட நடிகை ரைசா வில்சன் சில தினங்களுக்கு முன்பாக முகப்பொலிவு சிகிச்சைக்காக மருத்துவமனையில் நாடியுள்ளார். அப்பொழுது அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை இவருக்கு மருத்துவர் பைரவி செந்தில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

அதனால் அவருக்கு கன்னத்தில் வீக்கம் கண்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இது குறித்து மருத்துவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் அவர் தவறான முகப்பொலிவு சிகிச்சை அளிப்பதற்காக தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இத்தொகையை 15 நாட்களுக்குள் அனுப்பாவிட்டால் நீதிமன்றத்தின் மூலமாக நிவாரண தொகை வழங்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உள்ளார் சிகிச்சை அளித்த மருத்துவர்.

From around the web