அடடே நம்ம சிம்புவா இது ...!

சென்னை 600028, சரோஜா போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் தல அஜித்துக்கு" மங்காத்தா" திரைப்படத்தினை இயக்கினார். திரைப்படம் வெளியாகி "பிளாக்பஸ்டர் ஹிட்" அடித்தது. இந்நிலையில் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் "மாநாடு". இப்படத்தில் வல்லவன்,மன்மதன் போன்ற படங்களில் கதாநாயகன் ஆகிய நடிகர் சிம்பு நடித்துள்ளார

சில நாட்களுக்கு முன்பு "மாநாடு" திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வேற லெவல் வைரலாக பரவியது. நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் "யுவன் சங்கர் ராஜா" இசையமைத்துள்ளார். இவர்கள் மூவரின் கூட்டணியில் வெளியாக உள்ள திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு இருக்கும் அந்த போஸ்ட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று பரவி வருகிறது.
A working still of Dir @vp_offl and @SilambarasanTR_ from #Maanaadu sets.. pic.twitter.com/gTwhwOluYE
— Ramesh Bala (@rameshlaus) February 6, 2021