பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்துவை திருமணம் செய்து வைக்க ஆட்சியரிடம் மனு அளித்த முதியவர்

ஆந்திராவை சேர்ந்தவர் பி.வி சிந்து இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் இவர் பேட்மிட்டன் வீராங்கனை. இவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் முதியவ்ர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்ட ம் கமுதி அருகேயுள்ள விரதக்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி, 75 என்ற விவசாயிதான் இந்த மனுவை மக்கள் குறை தீர்க்கும் நாளில் கலெக்டரிடம்
 

ஆந்திராவை சேர்ந்தவர் பி.வி சிந்து இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் இவர் பேட்மிட்டன் வீராங்கனை. இவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் முதியவ்ர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்துவை திருமணம் செய்து வைக்க ஆட்சியரிடம் மனு அளித்த முதியவர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்ட ம் கமுதி அருகேயுள்ள விரதக்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி, 75 என்ற விவசாயிதான் இந்த மனுவை மக்கள் குறை தீர்க்கும் நாளில் கலெக்டரிடம் வழங்கியுள்ளார்.

பி.வி.சிந்துவின் புகைப்படத்தோடு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், விளையாட்டுத்துறையில் தீராத ஆர்வம் கொண்ட நான் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலித்து வருவதாகவும், பி.வி.சிந்துவை திருமணம் செய்தே தீருவேன் என்றும் கூறினார். மேலும் அந்த வீராங்கனை எங்கிருந்தாலும் விடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தனக்கு 16 வயதுதான் ஆவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து வைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். என்னய்யா நடக்குது நாட்ல ஒண்ணுமே புரியலய்யா.

From around the web