குறைந்து விட்ட தமிழ் பக்தி படங்கள்

ஒரு காலத்தில் இறையருள் இயக்குனர் ஷங்கர் என்ற ஒருவர் இருந்தார் இவர் இயக்கிய பக்தி படங்கள் பலவற்றுக்கு ரசிகர் கூட்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலும் பெண்கள்தான் பக்திப்படங்களை அதிகம் விரும்பி பார்ப்பர் என்பதால் இராமநாராயணன் இயக்கிய பல பக்தி படங்களில் பெண்கள் சிறு குழந்தைகளே பிரதான கதாபாத்திரமாக இருப்பர். யானை, குரங்கு, பாம்பு என பக்தி படங்களுக்கேற்ற சின்ன சின்ன கதாபாத்திரங்களும் இடம்பெற்று பெண்கள், குழந்தைகளை குதூகலிக்க வைத்தது. ஓம் சக்தி ஜெகதீசன் என்ற இயக்குனர் அம்மன்
 

ஒரு காலத்தில் இறையருள் இயக்குனர் ஷங்கர் என்ற ஒருவர் இருந்தார் இவர் இயக்கிய பக்தி படங்கள் பலவற்றுக்கு ரசிகர் கூட்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலும் பெண்கள்தான் பக்திப்படங்களை அதிகம் விரும்பி பார்ப்பர் என்பதால் இராமநாராயணன் இயக்கிய பல பக்தி படங்களில் பெண்கள் சிறு குழந்தைகளே பிரதான கதாபாத்திரமாக இருப்பர். யானை, குரங்கு, பாம்பு என பக்தி படங்களுக்கேற்ற சின்ன சின்ன கதாபாத்திரங்களும் இடம்பெற்று பெண்கள், குழந்தைகளை குதூகலிக்க வைத்தது.

குறைந்து விட்ட தமிழ் பக்தி படங்கள்

ஓம் சக்தி ஜெகதீசன் என்ற இயக்குனர் அம்மன் படங்களாக தொடர்ந்து இயக்கினார். தசரதன் என்ற இயக்குனர் அய்யப்பன் படங்களாக தொடர்ந்து இயக்கினார்.

அந்த காலத்தில் ஏபி நாகராஜன் என்ற மாபெரும் இயக்குனரே புராணங்களை மையமாக வைத்து படம் இயக்கியவர்.

திருவருட்செல்வர், சரஸ்வதி சபதம், திருவிளையாடல், திருமலை தென்குமரி, என பக்தி படங்களாக எடுத்து குவித்தவர் இவர்.

இதை எல்லாம் கோவில் திருவிழாக்களில் திரை கட்டி இந்த படங்களை ஒளிபரப்பி இரவு விடிய விடிய 3 படம் நாலு படம் போட்ட கிராமங்கள் எல்லாம் தமிழ் நாட்டில் உண்டு.

இவரின் படங்களுக்கு கடும் கிராக்கி அந்த காலத்தில் இருந்தது. இப்படிப்பட்ட ஜாம்பவான்கள் பலரும் பக்திப்படங்கள் இயக்கி வந்த நிலையில் பக்திப்படம் புராணப்படம் இயக்கும் நிலையில் எந்த இயக்குனரும் இல்லை என்பது வருந்ததக்க விஷயம்.

தற்போதைய ஆண்ட்ராய்டு சமூகமும் பக்தி என்ற நிலையில் இருந்து மாடர்னான விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது வேதனைக்குரிய விஷயமாகும். பிற்காலங்களில் பக்திப்படமே வராது என்ற நிலையை இது போன்ற நிலை ஏற்படுத்துகிறது.

From around the web