பிஜேபியில் இருந்து நான் விலகவில்லை-காயத்ரி ரகுராம்

பிரபல நடிகை காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டர் ரகுராம் அவர்களின் மகளான இவர் சார்லி சாப்ளின் உள்ளிட்ட ஆரம்ப கால படங்களில் நடித்த பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவரானார்.ஊரறிந்த நபரானார். சமீப காலமாக குறிப்பிட்ட கட்சியான பாரதியா ஜனதாவில் இணைந்து பங்காற்றி வருகிறார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளை இவர் ஆதரிக்கிறார்.இருப்பினும் தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் தகராறு என்ற ரீதியில் எல்லாம் தொடர் செய்திகள் வந்தன. சமீபத்தில்
 

பிரபல நடிகை காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டர் ரகுராம் அவர்களின் மகளான இவர் சார்லி சாப்ளின் உள்ளிட்ட ஆரம்ப கால படங்களில் நடித்த பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவில்லை.

பிஜேபியில் இருந்து நான் விலகவில்லை-காயத்ரி ரகுராம்

சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவரானார்.ஊரறிந்த நபரானார். சமீப காலமாக குறிப்பிட்ட கட்சியான பாரதியா ஜனதாவில் இணைந்து பங்காற்றி வருகிறார்.

பிரதமர் மோடியின் செயல்பாடுகளை இவர் ஆதரிக்கிறார்.இருப்பினும் தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் தகராறு என்ற ரீதியில் எல்லாம் தொடர் செய்திகள் வந்தன.

சமீபத்தில் ஒரு டுவிட் இட்டிருந்த காயத்ரி எதுவுமே இங்கு சரியாக நடக்கவில்லை என்று மிக மனவருத்தத்துடன் பிஜேபி மீதான தன் ஆதங்கத்தை அவர் பதிவேற்றி இருந்தார்.

இதைப்பற்றி எல்லா பத்திரிக்கையிலும் செய்தி வந்தது. காயத்ரி பிஜேபியில் இருந்து விலகிவிட்டார் என்று செய்திகள் வந்தன. இதை முற்றிலும் மறுத்துள்ள காயத்ரி. நான் பிஜேபியில் உள்ள சில குறைகளைத்தான் ஆதங்கத்தில் சொன்னேன். மற்றபடி வேறொன்றுமில்லை என்று கூறினார்.

கொஞ்சம் பிரேக் எடுத்துக்க விரும்பினேனே தவிர பிஜேபியில் இருந்து முற்றிலுமாக விலகவில்லை.

நான் சுப்பிரமணியன் சுவாமி சாரிடம் இருந்துதான் அரசியல் பாடம் கற்றுகொண்டிருக்கிறேன் அவரின் எல்லா பேச்சும் பாய்ண்ட்டாக உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

From around the web