கோடிக்கணக்கான மனங்கள் மட்டும் இல்லை மரங்களும் கண்ணீர்!

நடிகர் விவேக்கிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் சூரி!
 
கோடிக்கணக்கான மனங்கள் மட்டும் இல்லை மரங்களும் கண்ணீர்!

மக்களை சிரிக்க வைத்தால் மட்டும் போதும் சிந்திக்க வைக்க தேவையில்லை என்று பல நடிகர்கள் மத்தியில் மக்களுக்கு சிரிப்போடு சிந்தனையும் கொடுத்தவர் நடிகர் விவேக். நடிகர் விவேக் நடித்த பல படங்களில் காமெடியை விட அவரின் கருத்துகே மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் அவர் பாரபட்சமின்றி அனைத்து நடிகர்களும் இணை நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் புதுமுக இயக்குனர் பலருடனும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vivek

அவர் இன்று காலை மரணமடைந்து பலரையும் சோகத்தில் மூழ்கடித்த உள்ளார். மேலும் அவர் நேற்றைய தினம் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரித்து பலரையும் அழ வைத்துவிட்டார். மேலும் அவருக்கு அஞ்சலி செலுத்த சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் வந்து செலுத்தினர். மேலும் அவரது ரசிகர்களும் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தற்போது அவரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது .

பிரபல காமெடி நடிகர் சூரி அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் . அதன்படி அவர் சினிமா துறையில் மட்டும் சிரிக்க வைக்காமல் மக்களை சிந்திக்க வைக்க செய்தார். மேலும் உலகம் உள்ளவரை மக்கள் இருக்கும் வரை அவர்  வாழ்ந்து கொண்டிருப்பார் என்றும் கூறினார். மேலும் மனங்கள் மட்டும் இன்றி அவர் நட்டிய கோடிக்கணக்கான மரங்களும் இன்று அழுகிறது என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் நடிகர் சூரி.

From around the web