இப்பவும் இல்லை, எப்பவும் இல்லை: ரஜினி அரசியல் முடிவை கிண்டல் செய்த நடிகை!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி ஆன்மீக அரசியலை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரையும் அதிர்ச்சி தரும் வகையில் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று ரஜினிகாந்த் தனது முடிவை இன்று நீண்ட அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார் 

இது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ரஜினியின் இந்த முடிவு குறித்து பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பது: எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும்  சொன்னாரே இப்ப இல்லை, எப்பவுமே இல்லை’ என்று கூறியுள்ளார்.

kasturi

மேலும் கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்’ என்றும் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த டுவிட்டர் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் அதே நேரத்தில் சிலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web