’மாநாடு’ போஸ்டரில் இதை யாருமே கவனிக்கலையே, ஆனால் மகத் கவனிச்சிருக்கார்!

 

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று காலை சரியாக 10.44 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

சிம்புவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது மட்டுமின்றி ’மாநாடு’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது 

simbu mahat

இந்த நிலையில் இந்த போஸ்டர் குறித்து சிம்புவின் ரசிகர்கள் டுவிட்டரில் விமர்சனங்கள் செய்துவரும் நிலையில் சிம்புவின் நண்பரும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரும் நடிகருமான மகத், தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவுக்கு மூன்றாவது கண் இருப்பது குறித்து குறிப்பிட்டுள்ளார் 

மாநாடு போஸ்டரில் சிம்புவின் நெற்றியில் வட்ட வடிவில் ஒரு பொட்டு போன்ற ஒன்று இருப்பதை தான் அவர் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சிம்புவின் ரசிகர்கள் உள்பட யாருமே கவனிக்காத ’மாநாடு’ போஸ்டரில் உள்ள சிம்புவின் மூன்றாவது கண்ணுக்குப் படத்தின் கதையில் மிகப்பெரிய பின்னணி இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனை அடுத்து மகத்தின் இந்த ட்விட்டர் போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் முதலமைச்சராக நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் எஸ்.ஜே.சூர்யா பிரேம்ஜி உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web