ட்விட்டருக்கு நோ… இன்ஸ்டாவில் நுழைந்த ஜூலி… காரணம் இதுதானாம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஜூலி, ஜல்லிக் கட்டுப் போராட்டத்தின்மூலம் பிரபலமான இவருக்கு அதன் காரணமாக பிக் பாஸ் 1 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் உள்ளே காயத்ரி மற்றும் சக்தியுடன் கூட்டணி சேர்ந்து புறம் பேசுவது, பொய் பேசுவது எனப் பிரபலமானார். மேலும் ஓவியா மற்றும் பரணி விஷயத்தில் டபுள் கேம் ஆடியது என மக்களின் வெறுப்பினை போதும் போதும் என்னும் அளவு சம்பாதித்து விட்டார். முதல் சீசன்
 
ட்விட்டருக்கு நோ… இன்ஸ்டாவில் நுழைந்த ஜூலி… காரணம் இதுதானாம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 1  நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஜூலி, ஜல்லிக் கட்டுப் போராட்டத்தின்மூலம் பிரபலமான இவருக்கு அதன் காரணமாக பிக் பாஸ் 1 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் உள்ளே காயத்ரி மற்றும் சக்தியுடன் கூட்டணி சேர்ந்து புறம் பேசுவது, பொய் பேசுவது எனப் பிரபலமானார். மேலும் ஓவியா மற்றும் பரணி விஷயத்தில் டபுள் கேம் ஆடியது என மக்களின் வெறுப்பினை போதும் போதும் என்னும் அளவு சம்பாதித்து விட்டார்.

ட்விட்டருக்கு நோ… இன்ஸ்டாவில் நுழைந்த ஜூலி… காரணம் இதுதானாம்!!

முதல் சீசன் முடிந்த 2 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், இவர் எப்போ கிடைப்பார் வெச்சு செய்யலாம் என்பதுபோல் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சினிமாவில் சிறு கதாபாத்திரங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாய்ப்பினைப் பெற்றுவரும் அவர், சமூக சேவைகளைத் தொடர்கிறேன் என்ற பெயரில் ட்விட்டரில் அவ்வப்போது போஸ்ட் போட்டு வருகிறார்.

அவர் பங்குக்கு அவர் போஸ்ட் போட, ரசிகர்கள் பங்குக்கு ரசிகர்கள் வெச்சு செய்து வருகின்றனர். சில சமயங்களில் பொறுக்காத அவரோ, நான் என்ன தப்பு செஞ்சேன் பொய்தானே சொன்னேன்? என்பதுபோல் கோபமாக வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

தற்போது ட்விட்டரை விடுத்து இன்ஸ்டாகிராமில் நுழைந்துள்ளார். இன்ஸ்டாவில் லாக்டவுன் நேரத்தில் போட்டோ, வீடியோ, சமூக விழிப்புணர்வு பகிர்வுகள் எனக் கலக்கும் அவரை யாரும் திட்டவில்லை என்பதுதான் முக்கிய செய்தியாக உள்ளது.

From around the web