தேவையில்லை ஓடிடி, ஒன்லி திரையில்தான் தளபதி: விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன என்பதும் கிட்டத்தட்ட அனைத்து தளர்வுகளும் கிடைத்த பின்னரும் திரையரங்குகள் திறக்க மட்டும் அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திரையரங்குகள் திறக்க இன்னும் இரண்டு மாத காலம் ஆகலாம் என்றும் அப்படியே திரையரங்குகள் திறந்தாலும் பார்வையாளர்கள் வருவார்களா என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது எனவே சூரரைப்போற்று உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது இந்த நிலையில்
 

தேவையில்லை ஓடிடி, ஒன்லி திரையில்தான் தளபதி: விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன என்பதும் கிட்டத்தட்ட அனைத்து தளர்வுகளும் கிடைத்த பின்னரும் திரையரங்குகள் திறக்க மட்டும் அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திரையரங்குகள் திறக்க இன்னும் இரண்டு மாத காலம் ஆகலாம் என்றும் அப்படியே திரையரங்குகள் திறந்தாலும் பார்வையாளர்கள் வருவார்களா என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது எனவே சூரரைப்போற்று உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது

இந்த நிலையில் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், எப்பொழுது வேண்டுமானாலும் ஓடிடியில் ’மாஸ்டர்’ ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளிவரக் கூடாது என்று கோரிக்கை விடுத்து ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் தளபதிக்கு எங்களது அன்பான வேண்டுகோள் எங்களுக்கு தேவையில்லை ஓடிடி, எங்களுக்கு தேவை ஒன்லி தளபதி திரையில்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web