எஸ்பிபி இடத்தை எவராலும் நிரப்ப முடியாது: ரஜினிகாந்த்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் எஸ்பிபி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

ஸ்.பி.பி பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது நெருங்கிய நண்பர்கள் பலர் அவரது பாடல்களை விட அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள்

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. எனது குரலாக பல ஆண்டுகாலம் ஒலித்தீர்கள். உங்களது குரலும், நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும்

வேறு எந்த பாடகருக்கும் இல்லாத சிறப்பு எஸ்பிபிக்கு உண்டு. அது அவர் பல மொழிகளில் பாடியது. கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் அவர் பாடியுள்ளார். அவரது குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார். 


 

From around the web