இனிமேல் பிக்பாஸ் நியூஸ் எதுவும் வெளிவராது: அதிர்ச்சி தகவல்

 

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பிக்கும் போது அதில் நடந்த சனி ஞாயிறு நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் முன்கூட்டியே டுவிட்டரில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால் இம்முறை அவ்வாறு வெளிவராது என்ற தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 

கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக இந்த முறை சனி ஞாயிறு கிழமைகளில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது இதனால் எலுமினேஷன் உள்பட அந்த இரண்டு நாட்களில் நடக்கும் தகவல்கள் எதுவும் வெளியே வராது என உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

கமல்ஹாசனே அந்த நிகழ்ச்சியில் அறிவிக்கும் வரை அந்தந்த வாரங்களில் எலிமினேட் செய்யப்படுவது யார் என்பது முன்கூட்டியே தெரியாததால் நிகழ்ச்சி சுவாரசியமாகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது

From around the web