அபிராமிக்கு ஒரு நியாயம்… மதுமிதாவுக்கு ஒரு நியாயமா?

விஜய் டிவியில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி அநியாயங்களைத் தாண்டி வெற்றி நடைபோடுகிறது, பாரபட்சம் காட்டுவதில் பிக் பாஸை அடித்துக் கொள்ளவே முடியாது. கமல் ஹாசனையும் கேள்வி கேட்கும் அதிகாரத்தில் கை வைத்துள்ளதால் அவரும் நிகழ்ச்சியில் பட்டும்படாமலே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பெரிதளவில் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை, மிகப் பெரிய தவறுகளைவிட்டு விட்டு சப்ப மேட்டர் பத்தி பேசிட்டு போற மாதிரி இருக்கு. மதுமிதா, சேரன், கஸ்தூரி என அனைவரையும் டார்கெட் செய்தது சாண்டி- கவின்
 
அபிராமிக்கு ஒரு நியாயம்… மதுமிதாவுக்கு ஒரு நியாயமா?

விஜய் டிவியில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி அநியாயங்களைத் தாண்டி வெற்றி நடைபோடுகிறது, பாரபட்சம் காட்டுவதில் பிக் பாஸை அடித்துக் கொள்ளவே முடியாது. கமல் ஹாசனையும் கேள்வி கேட்கும் அதிகாரத்தில் கை வைத்துள்ளதால் அவரும் நிகழ்ச்சியில் பட்டும்படாமலே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பெரிதளவில் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை, மிகப் பெரிய தவறுகளைவிட்டு விட்டு சப்ப மேட்டர் பத்தி பேசிட்டு போற மாதிரி இருக்கு.

அபிராமிக்கு ஒரு நியாயம்… மதுமிதாவுக்கு ஒரு நியாயமா?

மதுமிதா, சேரன், கஸ்தூரி என அனைவரையும் டார்கெட் செய்தது சாண்டி- கவின் குரூப். ஆனால் அதனை ஒருமுறை வார்னிங்க் செய்வதுபோலக் கூட பேசவில்லை கமல் ஹாசன்.

சேரன் எப்போதும் தமிழக மக்களால் மரியாதையாக பாராட்டப் பெறுபவர், அவரை வயது வித்தியாசம் பாராமல் அவமரியாதை செய்தது, கஸ்தூரியை காக்கா என அழைத்தது என்பதைத் தாண்டி மதுமிதாவை தற்கொலை முயற்சிக்கு தூண்டியது என நடந்த எந்த ஒரு அவலங்களும் தட்டிக் கேட்கப்படவில்லை 

வனிதாவை வாத்து என்று கூறுவது தவறு என்றால், கஸ்தூரியை சத்துணவு ஆயா என்பது மட்டும் சரியா?

அபிராமி தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டபோது, அவருக்கு உள்ளே மருத்துவ ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்பட்டது, வெளியே அனுப்பப்படவில்லை, ஆனால் மதுமிதாவும் ஏதோ ஒரு காரணத்திற்காக தன்னைத் தானே தாக்கிக் கொண்டார். அவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படாமல், இப்படி வெளியேற்றியது எந்தவிதத்தில் நியாயம்? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர் பார்வையாளர்கள்.

From around the web