திருமணம் செய்ய வற்புறுத்துவதாக நண்பர் மீது நடிகை புகார்

தன்னிடம் நட்புடன் பழகி வந்த ஒருவர் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்துவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொலைக்காட்சி நடிகை நிலானி மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகையும் சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்ற போது போலீஸ் சீருடையில் தோன்றி போலீசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவருமான நடிகை நிலானி நேற்று மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: காந்தி
 

திருமணம் செய்ய வற்புறுத்துவதாக நண்பர் மீது நடிகை புகார்

தன்னிடம் நட்புடன் பழகி வந்த ஒருவர் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்துவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொலைக்காட்சி நடிகை நிலானி மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகையும் சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்ற போது போலீஸ் சீருடையில் தோன்றி போலீசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவருமான நடிகை நிலானி நேற்று மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

திருமணம் செய்ய வற்புறுத்துவதாக நண்பர் மீது நடிகை புகார்காந்தி லலித்குமார் என்பவரும், நானும் நண்பர்களாக பழகி வந்தோம். தற்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் தொந்தரவு செய்து வருகிறார். இது எனக்கு பிடிக்கவில்லை.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டு அசிங்கமாக பேசினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

From around the web