ஹாட்ஸ்டாரில் வெளியாகும் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

 

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்ப்பட வேண்டும் என்ற நிபந்தனை காரணமாகவும், திரையரங்குகளுக்கு போதுமான கூட்டம் வராத காரணத்தாலும் இன்னும் ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்வதில் தான் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் 

இன்று காலை ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான காரணத்தையும் விளக்கமாக ஜெயம் ரவி தனது அறிக்கை ஒன்றில் கூறினார் என்பதை பார்த்தோம் 

பூமி திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதே நாளில் மற்றொரு படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது 

sinam movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சாய்தன்ஷிகா நடித்த சினம் என்ற திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக சற்றுமுன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஆனந்த மூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார்

இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும் ஓடிடி பிளாட்பாரத்தில் அதிக திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web