அடுத்த லேடி சூப்பர்ஸ்டார்: அனிகாவுக்கு ஆறுதல் கூறும் நெட்டிசன்கள்

 

அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் தற்போது குமரியாகி விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே 

ஒரு சில புகைப்படங்கள் அளவுக்கு மீறிய கவர்ச்சியாகவும் ஒரு சில புகைப்படங்கள் குடும்பப்பாங்காக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனிகா சுரேந்திரனின் ஒவ்வொரு புகைப்படத்திற்கு லைக்ஸ்களும், கமெண்டுகளும் குவிந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில்தான் சில நிமிடங்களுக்கு முன்னராக மஞ்சள் நிற பேண்ட் மற்றும் கருப்பு நிற மேலாடை அணிந்து சூப்பரான போஸ் ஒன்றை கொடுத்துள்ளார் அனிகா. ஆனால் இந்த புகைப்படத்தில் அவர் சோகமாக இருப்பது போல் உள்ளது. பத்துக்கு ஐந்து தான் கிடைத்துள்ளது  என்றும் அவர் புரியாத வகையில் ஒரு பதிவையும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரது சோக்த்திற்கு என்ன காரணம் என்றே தெரியாமல் அவருக்கு நெட்டிசன்கள் ஆறுதலுடன் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

இந்த நிலையில் நெட்டிசன்களில் ஒருவர்  ’அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் நீங்கள் தான் என்றும் எனவே நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள் என்றும் உங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல பிரேக் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார் 

அவர் கூறியது போலவே அனிகாவுக்கு  ஒருசில  திரைப்படங்களில் நாயகி வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் நாயகியாக அறிமுகமாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

From around the web