சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் அடுத்தடுத்த 4 அறிவிப்புகள்

 

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 26 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அயலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ‘டான்’ என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது 

மேலும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயன் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த நான்கு அறிவிப்புகள் சற்றுமுன் வெளியாகி உள்ளது 

இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியானது. அதனை அடுத்து இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் சமுத்திரகனியும் காமெடி கேரக்டரில் சூரியும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
மீண்டும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஒரே படத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்


 


 


  

From around the web