விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல்!

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

 

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

திரையரங்குகள் திறப்பது எப்போது என்பது குறித்து ஆலோசனை செய்ய திரையரங்க உரிமையாளர்களுடன் நாளை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மாலை வெளியாகும் என்று கூறப்படுகிறது 

இந்த நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டால் அதன் பின்னர் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களை கணித்து அக்டோபர் 27-ஆம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அக்டோபர் 27ஆம் தேதி மிலாடி நபி விடுமுறை தினம் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே அக்டோபர் 30-ஆம் தேதி சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் ரிலீ|ஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அக்டோபர் 27-ஆம் தேதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளிவந்தால் சூர்யாவின் சூரரைப்போற்று ரிலீஸ் தேதி தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

From around the web