அர்ச்சனா குருப்புக்கு எதிராக புதிய குரூப்: ஆட்டம் சூடுபிடிக்குது

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா தலைமையில் ஒரு குரூப் உள்ளது என்பதும் அந்த குரூப்பில் உள்ள நிஷா, ரியோ, சோம்சேகர், பாலாஜி ஆகியோர்களுக்கு ஃபேவரிஸம் செய்யப்படுகிறது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனை கமல்ஹாசனும் மறைமுகமாக சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அர்ச்சனா குருப்புக்கு எதிராக ஒரு புதிய குரூப் உருவாகி உள்ளது. ஆரி தலைமையிலான அந்த குரூப்பில் அனிதா தற்போதைக்கு இணைந்துள்ளார் என்றும், மேலும் இன்று புதிதாக வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரும் சுசித்ராவும் அந்த குரூப்பில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது

அர்ச்சனா குரூப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆரியின் குரூப் இருக்கும் என்பதாலும் இந்த குரூப்பில் மேலும் சிலர் இணைய வாய்ப்பு உள்ளது என்பதாலும் இனி வரும் நாட்களில் இரண்டு குருப்புகளுக்கும் இடையே ஆட்டம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இரண்டு குரூப்பிலும் இல்லாமல் ஆஜித், ரம்யா, கேப்ரில்லா உள்ளிட்ட ஒரு சிலர் இருக்க வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web