குக் வித் கோமாளி... வைல்டு கார்டில் போட்டியாளராக களமிறங்கிய நடிகை...

அதாவது வைல்டு  கார்டு போட்டியாளராக நடிகை ஒருவர் களமிறங்கியுள்ளார். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இப்படி வைர்ல்டு  கார்டு போட்டியாளர்கள் நுழைவது வழக்கம். 
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். 

போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரலாற்றில் இதுவரை நடித்திராத புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளது. அதாவது வைல்டு  கார்டு போட்டியாளராக நடிகை ஒருவர் களமிறங்கியுள்ளார். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இப்படி வைர்ல்டு  கார்டு போட்டியாளர்கள் நுழைவது வழக்கம். 

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி தொடரில் நடிக்கும் ரித்திகா என்ற நடிகை தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உள்ளே நுழைந்துள்ளார். இவர் சூப்பர் சிங்கர் கிராண்ட் அறிமுக நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஸ்பெஷல் பெர்பாமன்ஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் இந்த புரோமோ தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வேற லெவல் வைரலாகி வருகிறது.

From around the web