பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த புது நடிகை... 

தீபிகாவாவது கண்ணனுக்கு ஜோடியாக தொடர்வாரா என்று ரசிகர்கள் கேட்கின்றனர்.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த தொடரில் முல்லை, கதிர், தனம் என அந்த தொடரில் நடிக்கும் நடிகர்களை கதாப்பாத்திரங்களின் பெயர்களாலேயே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். 

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்பாக வெளியாகும் செய்திகள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இந்த சீரியலின் வெற்றியை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட வெகு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. இந்நிலையில் தற்போது சித்ராவுக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா தற்போது முல்லையாக நடித்து வருகிறார்.

இந்த தொடரில் முதல் மூன்று அண்ணன்களுக்கு திருமணம் நடந்துவிட கடைக்குட்டியான கண்ணன் மட்டும் சிங்கிளாகவே சுற்றிவந்தார். இந்நிலையில் அவருக்கு ஜோடியாக ஆரம்பத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அழகிய தமிழ் மகள், ராஜா மகள் போன்ற பல தொடர்களில் நடித்த சத்யசாய் கிருஷ்ணா அறிமுகமானார். 

இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட பதிவிட்டிருந்தார். அதன் பிறகு அனுஷ்கா என்பவரும்  ஜோடியாக நடித்திருந்தனர். இருப்பினும் எதுவும் பெரிதாக தொடர்வது போல் தெரியவில்லை. இந்நிலையில் தற்பொழுது புதிதாக தீபிகா என்பவரை களமிறக்கியுள்ளனர். தீபிகாவாவது கண்ணனுக்கு ஜோடியாக தொடர்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

From around the web