மாஸ்டர் திரைப்படத்தால் விஜய்க்கு வந்த புதிய 2 சிக்கல்கள்

மாஸ்டர் படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

 

100 சதவீத இருக்கைகள் பயன்பாட்டுன் தான் மாஸ்டர் ரிலீஸாக வேண்டும் என்று விஜய் விரும்பினாராம். தற்போது அவரின் ஆசை நிறைவேறாமல் போகப் போகிறது. மாஸ்டர் படத்தின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் முடிஞ்சா தொடச் சொல்றா பார்ப்போம் என்று விஜய் வசனம் பேசியிருந்தார். 

அந்த வீடியோ வெளியான வேகத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு எழுதிய கடிதம் வெளியானது. அதை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, தொட்டுட்டாங்க வாத்தி என்று தெரிவித்துள்ளனர்.விஜய்க்கு கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். 

ஆனால் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. தங்களின் கோரிக்கைகளை மாநில அரசு ஏற்கும் வரை தியேட்டர்களை திறப்பது இல்லை என்று கேரளா ஃபிலிம் சேம்பர் முடிவு செய்துள்ளது. இதனால் கேரளாவில் மாஸ்டர் ரிலீஸாவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

ஒரு பக்கம் கேரளா பிரச்சனை, மறுபக்கம் தமிழக தியேட்டர்களில் இருக்கை பிரச்சனையாக உள்ளது. 50 சதவீத இருக்ககைளுடன் படத்தை வெளியிட்டால் வசூலில் நஷ்டம் தான் ஏற்படும் என்கிறார்கள் திரையுலகினர்.

From around the web