இதுவரை இல்லாத ஆங்கிளில் நயன் புகைப்படம்; இணையத்தில் வைரல்!

 

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் விதவிதமான ஆங்கிளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இதுவரை நாம் பார்த்திருக்கின்றோம். குறிப்பாக விக்னேஷ் சிவனுடன் நயன் இருக்கும் புகைப்படங்கள் வித்தியாசமான ஆங்கிளில் இருக்கும் என்பதும் அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையதளங்களில் வைரலாகி வந்ததையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது புதுமையாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு டாப் ஆங்கிளில் நயன்தாராவின் புகைப்படம் வெளிவந்தது இல்லை என்றும் இது தான் முதல் டாப் ஆங்கிள் நயன்தாரா புகைப்படம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன 


இந்த புகைப்படம் நயன்தாராவின் வீட்டில் எடுக்கப்பட்டதாகவும் மிகவும் கலை அம்சத்துடன் இருக்கும் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்து வருவதோடு ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாக வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

நயன்தாரா தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web