பிக் பாஸ் வீட்டில் நீயா? நானா?- அடித்துக் கொள்ளும் போட்டியாளர்கள்

விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. மற்ற சீசன்களைவிட அதிக அளவிலான டிஆர்பி ரேட்டையும், அதிக அளவில் ரசிகர்களையும் கொண்டு உள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் சபாஷ் சரியான போட்டி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது இந்த டாஸ்க்கில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பிரிய வேண்டும், பிக் பாஸ் கொடுக்கும் கேள்விகளுக்கு இரு தரப்பிலும் வாதிட்டு தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதுபோல டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி வனிதா, கஸ்தூரி,
 
பிக் பாஸ் வீட்டில் நீயா? நானா?- அடித்துக் கொள்ளும் போட்டியாளர்கள்

விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. மற்ற சீசன்களைவிட அதிக அளவிலான டிஆர்பி ரேட்டையும், அதிக அளவில் ரசிகர்களையும் கொண்டு உள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் சபாஷ் சரியான போட்டி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது இந்த டாஸ்க்கில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பிரிய வேண்டும், பிக் பாஸ் கொடுக்கும் கேள்விகளுக்கு இரு தரப்பிலும் வாதிட்டு தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதுபோல டாஸ்க் கொடுக்கப்பட்டது. 


அதன்படி வனிதா, கஸ்தூரி, மதுமிதா, ஷெரின், அபிராமி, லாஸ்லியா ஆகியோர் ஒரு அணியிலும் கவின், சாண்டி, தர்சன், முகின், சேரன் ஆகியோர் ஒரு அணியிலும் இருந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் நீயா? நானா?- அடித்துக் கொள்ளும் போட்டியாளர்கள்

சிறந்த தலைவர்களாக இருந்தவர்கள் யார்? சமைக்க தெரிந்தவர்கள் யார்? சிறந்த நட்பு கொண்டவர்கள் யார்? என்று பல கேள்விகள் வைக்கப்பட்டன.

அதில் இரு அணியினரும் மாறி மாறி தங்கள் விவாதத்தினை கார சாரமாகப் பேசிக் கொண்டனர், தனிப்பட்ட பல விஷயங்களையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுட்டிக் காட்டி பேசினார்.

அனைவரும் அடிக்காத அளவு குறையாக குமுறி விட்டனர் என்றே சொல்லலாம். இந்த டாஸ்க் இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


From around the web