நயன்தாராவிற்கு தேடி வந்த வாய்ப்பு... எல்லாம் அவரால போச்சு!

நயன்தாராவிற்கு ஷாருக்கானுடன் நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்தும் முன்னாள் காதலரால் பறிபோனதாக கூறப்படுகின்றது.
 

தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ஷாருக்கானின் படத்தில் நடிக்கவும் நயன்தாராவிற்கு வாய்ப்பு தேடி வந்தது.

ஆம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் இடம் பெரும் ஒரு குத்து பாட்டிற்கு நடனமாட நடிகை நயன்தாராவை இயக்குனர் அணுகியுள்ளார்.

ஆனால் இந்த பாட்டிற்கு நடன இயக்குனராக நயன்தாராவின் முன்னாள் காதலர் இருந்ததால், நடிகை நயன்தாரா இப்படத்தில் ஒப்பந்தமாக முடியாது என்று அதிரடியாக கூறிவிட்டாராம். இதன்பின் அந்த குத்து பாடலுக்கு நடிகை ப்ரியாமணி நடமாடி வெளியானது குறிப்பிடத்தக்கது.

From around the web