பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா: அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன் 

 

பிரபுதேவா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ’வில்லு’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது காதலித்ததார்கள் என்பதும் நயன்தாராவின் காதலுக்காக பிரபுதேவா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார் என்பதும் தெரிந்தது 

இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காதல் பிரேக் அப் ஆனது அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து வருகிறார் 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பிரபுதேவாவுடன் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பிரபுதேவாவுடன் நயன்தாரா இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என்றும் இந்த தகவலில் உண்மை இல்லை என்றும் கூறப்பட்டது 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் நடை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது

மீண்டும் பிரபுதேவா படத்தில் நயன்தாரா நடிக்கும் தகவல் விக்னேஷ் சிவன் தரப்பினரை அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

From around the web