உண்மையான அம்மன் போல இருக்கிறார் நயன்தாரா: ஆல்யா மானசா

 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ’மூக்குத்தி அம்மன் திரைப்படம் நேற்று தீபாவளி விருந்தாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்து வருகின்றன. நயன்தாராவின் அம்மன் நடிப்பு சூப்பராக இருப்பதாகவும் ஆர்ஜே பாலாயின் ஒன் லைன் காமெடி வொர்க் அவுட் ஆகி உள்ளதாகவும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் முதல் பாதியில் இருந்த திரைக்கதையில் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்றும் ஒரு சில விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர் 

இந்த நிலையில் நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கண்டு ரசித்து தங்களுடைய கருத்துக்களை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தொலைக்காட்சி நடிகை ஆலியா மானசா தனது வீட்டில் ’மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை பார்க்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் 

அம்மன் வேடத்துடன் தொலைக்காட்சி திரையில் நயன்தாராவை பார்க்கும்போது உண்மையான அம்மனை பார்ப்பது போல் இருப்பதாக ஆலியா மானசா, நயன்தாராவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் படம் சூப்பராக இருப்பதாகவும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆலியா மானசா இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web