லிட்டருக்கு 4 சொட்டு.. உஜாலா விளம்பரத்தில் நயன்தாரா!!!

உஜாலா விளம்பரத்தில் நயன்தாரா நடித்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் இது நயன்தாரா தான். சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் என்னவோ காதல் சம்பந்தப்பட்ட படங்களாக நடித்தார்.

படத்தில் காதல் காட்சிகள், நடனம், சில காமெடி என இப்படியே இருந்தது. பின் சுதாரித்துக் கொண்ட நயன்தாரா நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.

பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளில் நடித்து அதில் வெற்றியும் கண்டார். அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களும் கைவசம் வைத்துள்ளார். இந்த நேரத்தில் தான் நயன்தாரா நடித்த ஒரு விளம்பரத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

உஜாலா விளம்பரத்தில் நயன்தாரா நடித்திருக்கும் வீடியோ இதோ


 

From around the web