‘இதுவும் கடந்து போகும்’: நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ சிங்கிள் பாடல்

 
netrikkan

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த டிரைலரை பார்த்த உடனே படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. ’இதுவும் கடந்து போகும்’ என்று தொடங்கும் இந்த பாடலை பிரபல பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ண இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். இந்த பாடல் சூப்பர் மெலோடி பாடலாக அமைந்துள்ளதாகவும் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஒரு புதிய அனுபவம் ஏற்படுவதாகவும் இந்த பாடலை கேட்ட நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே நிச்சயம் இந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் மற்றும் சஸ்பென்ஸ், த்ரில் கதை அம்சம் கொண்ட இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web