நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று ‘கோலமாவு கோகிலா’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் நேற்றிரவு சென்சார் செய்யப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் பணிகள் முடிவடைந்துவிட்டதால் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. காமெடி மற்றும் ரொமான்ஸ் படமான
 
kolamavu kokila

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று ‘கோலமாவு கோகிலா’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் நேற்றிரவு சென்சார் செய்யப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் பணிகள் முடிவடைந்துவிட்டதால் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

காமெடி மற்றும் ரொமான்ஸ் படமான இந்த படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ‘யூஏ’ சான்றிதழ் பெறும் அளவுக்கு இந்த படத்தில் என்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் இந்த படம் ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ்நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விஜய் டிவியில் பணிபுரிந்த நெல்சன் இயக்கியுள்ளார். இவர்தான் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் ஒருசில பகுதிகளை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இளம் இசைப்புயல் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

From around the web