’நெற்றிக்கண்’ படத்தில் நயன்தாரா கேரக்டர்: அசத்தலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

 

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ’நெற்றிக்கண்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் அவர் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது

நயன்தாரா இந்த படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார் என்பது குறித்த தகவல் ஏற்கனவே வந்த நிலையில் இன்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து அது உறுதி செய்யப்பட்டுள்ளது 

பார்வையற்ற மாற்றுத் திறனாளியான நயன்தாரா கையில் ஸ்டிக்கையும் இன்னொரு கையில் நாயையும் பிடித்துக்கொண்டு வருவது போன்ற காட்சி அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ளது. மேலும் இன்று காலை 9.09 மணிக்கு  இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர் என்பதும் இந்த போஸ்டரில் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார் என்பதும் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், விரைவில் இந்த படம் ரிலீசாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன,

From around the web