மாலையில் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா: புகைப்படங்கள் வைரல் 

 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியதையடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

அது மட்டுமன்றி நயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்து வரும் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது என்பதும் அந்த டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் தெரிந்ததே 

nayanthara

இந்த நிலையில் மலையாள படமொன்றின் படப்பிடிப்பில் இருந்த நயன்தாரா நேற்று மாலை தனது பிறந்தநாளை பட குழுவினர் மற்றும் குடும்பத்தினர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். அலங்கரிக்கப்பட்ட ஒரு அறையில் நயன்தாரா பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன 

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டபோது அம்மா அப்பா மற்றும் சகோதரர் ஆகியோருடன் இனிமையான பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

From around the web