மீண்டும் பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாரா: வைரலாகும் புகைப்படங்கள்!

 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவருடைய வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே 

அதுமட்டுமின்றி காதலர் விக்னேஷ் சிவன் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நயன்தாராவின் பிறந்தநாளின் போது அவர் நடித்த நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது 

nayanthara birthday

இந்த நிலையில் நிழல் என்ற மலையாளத் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் படக்குழுவினர்கள் முன் ஒரு முறை மீண்டும் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்

நயன்தாரா கேக் வெட்டும் போது அனைத்து படக்குழுவினர்களும் கைதட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் கேக்கை வெட்டி தனது கையாலேயே இயக்குனர் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் அவர் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நிழல் படக்குழுவினருடன் நயன்தாரா பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

From around the web