விக்னேஷ்சிவன் – நயன்தாரா தனிமைப்படுத்தப்பட்டார்களா? பிரபல நாளிதழின் செய்தியால் பரபரப்பு

உலகம் முழுவதும் ஜாதி, மத, இன பேதமின்றி அனைத்து தரப்பினரையும் தொற்றி வரும் கொரோனா வைரஸ் திரையுலகினரின் விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இது குறித்து முன்னணி நாளிதழ் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும்
 
விக்னேஷ்சிவன் – நயன்தாரா தனிமைப்படுத்தப்பட்டார்களா? பிரபல நாளிதழின் செய்தியால் பரபரப்பு

உலகம் முழுவதும் ஜாதி, மத, இன பேதமின்றி அனைத்து தரப்பினரையும் தொற்றி வரும் கொரோனா வைரஸ் திரையுலகினரின் விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது குறித்து முன்னணி நாளிதழ் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா அறிகுறி இருந்ததால் இருவரும் தங்களை தாங்களே தங்களது வீட்டில் தனிமை படுத்தி கொண்டதாக செய்தி வெளியிட்டுள்ளது

ஆனால் இந்த செய்தி முற்றிலும் தவறானது என்றும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர்களுக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லை என்றும் நயன்தாரா தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகியுள்ளது

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படம் வெளியாகும். மேலும் அவருடைய அடுத்த படமான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web