பிரபல நடிகருக்கு தங்கையாக நடிகை நயன்தாரா? என்னடா புதுசா இருக்கு!

அண்ணாத்த படத்தை தொடர்ந்து வரிசையாக பல படங்களை கையில் வைத்திருக்கும் நயன்தாரா தற்போது பிரபல முன்னனி நடிகருக்கு தங்கையாக நடிக்கிறாராம்.

 

மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இதற்கிடையில் நயன் தாரா சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் இணைந்துள்ளார்.

அவரின் நெற்றிக்கண் படமும் தயாராகிவருகிறது. தெலுங்கு படங்களிலும் நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது அவர் மலையாள படமான லுசிஃபர் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கவுள்ளதாக தகவல் சுற்றி வருகின்றன. 

From around the web