எஸ்பிபிக்காக நயன்தாரா வெளியிட்ட அறிகை: இணையதளங்களில் வைரல்!

 

பிரபல நடிகை நயன்தாரா வெகு அரிதாகவே அறிக்கை வெளியிடும் வழக்கமுள்ளவர் என்ற நிலையில் தற்போது எஸ்பிபி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தெய்வீகக்‌ குரல்‌ இனி இல்லை என்பதை நினைக்கும்‌ போதே நெஞ்சம்‌ பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்பி பாலசுப்ரமணியம்‌ சாருடைய குரல்‌, நம்முடைய எல்லா காலங்களுக்கும்‌, காரணங்களும்‌ பொருந்தி இருக்கும்‌.

நீங்கள்‌ இனி இல்லை என்பதை மனம்‌ நம்ப மறுக்கிறது... ஆயினும்‌ உங்கள்‌ குரல்‌ என்றென்றும்‌ நீங்கா புகழுடன்‌ இருக்கும்‌. உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல்‌ சொல்லிக்‌ கொள்ளும்‌ இந்த நேரத்தில்‌ கூட உங்கள்‌ பாடல்‌ மட்டுமே பொருந்துகிறது. எங்கள்‌ வாழ்வில்‌ உங்களின்‌ ஆளுமை அப்படி. நீண்ட காலமாக இடைவிடாமல்‌ உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம்‌ இல்லாமல்‌ பிரியா விடை கொடுக்கிறோம்‌. 

பாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்‌. உங்களை பிரிந்து வாடும்‌ உங்கள்‌ குடும்பத்தாருக்கும்‌, நண்பர்களுக்கும்‌, உங்கள்‌ திரை உலக சகாக்களுக்கும்‌, உலகெங்கும்‌ பரவி இருக்கும்‌ உங்கள்‌ எண்ணற்ற ரசிகர்களுக்கும்‌ என்‌ மனமார்ந்த ஆறுதல்‌ செய்தி இது...

நடிகை நயன்தாராவின் இந்த அறிக்கை தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

From around the web