ஈஸ்டர் ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்ட நயன் விக்கி ஜோடி!...

ஈஸ்டர் தின ஸ்பெஷலாக அவர்கள் நெருக்ககமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 
 

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் நடிகை நயன்தாரா, இவருக்கு முண்ணனி நடிகர்களுக்கு சமமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அந்த வகையில் இவர் நடிப்பில் பிரபல OTT தளத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் பெரிய வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் நடிகை நயன்தாராவும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம்.

இதனிடையே விக்னேஷ் சிவன் அவரின் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஈஸ்டர் தின ஸ்பெஷலாக அவர்கள் நெருக்ககமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

From around the web