மிகவும் வைரலான நடிகை நக்ஷத்ரா நிச்சயதார்த்த புகைப்படங்கள்... மாப்பிள்ளை இவர் தானா?

இந்நிலையில் தனது வருங்கால கணவருடன்  வெளியிட்ட புகைப்படம்  மிகவும் வைரலானது. இந்நிலையில் இவர்களுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

நாயகி, ரோஜா, மின்னலே, திருமகள், வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்துள்ள நடிகை நக்ஷத்ரா. பல சேனல்களில் ஜோடி நம்பர் 1, சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கியுள்ளார். 

அதேபோல் தமிழில் மிஸ்டர் லோக்கல், இரும்பு குதிரை, வாயை மூடி பேசவும் போன்ற பல படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் தனது வாழ்க்கை துணை பற்றி சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டிருந்தார். 

இன்ஸ்டாகிராமில் அவர் கூறும்போது "நான் இன்ஸ்டாகிராமிற்கு முதல் முறையாக வந்தபொழுது, நண்பர்கள் மட்டும் தான். ஆனால் நடிப்பு தொழில் நான் ஈடுபட்ட பொழுது ரசிகர்கள் நீங்கள் எல்லாரும் என் சிறிய உலகத்தின் ஒரு அங்கமானீர்கள். நாளுக்கு நாள் நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பு வளர்ந்து கொண்டே வருகிறது. அதுதான் என்னுடைய மிகப்பெரிய பலம். 

அதற்கு நான் காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இவர்தான் அவர் ❤️ #NakshufoundherRagha" என்று கூறியிருந்தார். இந்நிலையில் தனது வருங்கால கணவருடன்  வெளியிட்ட புகைப்படம்  மிகவும் வைரலானது. இந்நிலையில் இவர்களுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

From around the web