’நவரசா’ ஆந்தாலஜி: பொன்ராம் பகுதியின் டைட்டில் மற்றும் நடிகர்களின் விபரங்கள்!

 


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது பல முன்னணி இயக்குனர்கள் ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்கி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் மணிரத்னம் தயாரிப்பில் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் உருவாகி வருகிறது என்றும் இதில் உள்ள ஒன்பது பகுதிகளை கேவி ஆனந்த், கௌதம் மேனன், விஜய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன் ராம், கார்த்திக் நரேன், ரதீந்திரன் பிரசாத் மற்றும் அரவிந்தசாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளிவந்தது

இந்த நிலையில் தற்போதில் இதில் பொன்ராம் இயக்கும் பகுதிக்கு ‘டவுன்பஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கெளதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் சரவணன், ரோபோசங்கர் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானலில் 4 நாட்கள் நடந்தது என்பதும், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்ட இந்த பகுதி நிச்சயம் பொன்ராமுக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறத்ய்

From around the web