ஏப்ரல் 23 க்கு வருகிறார் "நேச்சுரல் ஸ்டார்"!

ஏப்ரல் 23 க்கு வெளியாக உள்ளது நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்!
 
நடிகர் நானியின் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் தகவல்!

தனது நடிப்பாலும், தனது அழகாலும் இன்று "நேச்சுரல் ஸ்டார்" என்று அழைக்கப்படுபவர் நடிகர் "நானி". "நானி" நடிப்பில் தமிழில் வெளியாகிய "நான் ஈ" என்ற திரைப்படம் மிகுந்த வரவேற்பு பெற்ற வெற்றித் திரைப்படமாக அமைந்தது. திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக "நடிகை சமந்தா" நடித்திருந்தார்.

nani

மேலும் இவர் "தேவதாஸ்", "ஜெர்சி" போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் தமிழில் "ஆஹா கல்யாணம்" என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "டக் ஜெகதீஷ்" . திரைப்படத்தின் டீசர் ஆனது சில நிமிடங்களுக்கு முன் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் நடிகர் நானி தனது ட்விட்டர் பக்கத்தில் இத்திரைப்படமானது ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என கூறியுள்ளார். இதனால்  ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும், கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் இவருடைய டீசஸருக்கு லைக்ஸ் வந்த வண்ணமாக உள்ளது.

From around the web