சில்க் கதையின் நாயகனாக நடிக்கும் நட்டி நட்ராஜ்

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று ஏற்கனவே கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிவிட்டது தெரிந்ததே. ஆனால் நட்டி நட்ராஜ் நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் சில்க் என்றாலும் இந்த படம் காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் குறித்த கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஹீரோவான நட்டிநட்ராஜ், சில்க் புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்யும் கேரக்டரில் நடிக்கவுள்ளார். அவ்வாறு ஒரு சில்க் புடவையை டெலிவரி செய்ய போகும்போது ஏற்படும் காதல்தான் படத்தின் கதை
 

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று ஏற்கனவே கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிவிட்டது தெரிந்ததே. ஆனால் நட்டி நட்ராஜ் நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் சில்க் என்றாலும் இந்த படம் காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் குறித்த கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஹீரோவான நட்டிநட்ராஜ், சில்க் புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்யும் கேரக்டரில் நடிக்கவுள்ளார். அவ்வாறு ஒரு சில்க் புடவையை டெலிவரி செய்ய போகும்போது ஏற்படும் காதல்தான் படத்தின் கதை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஹரி மற்றும் ஹரீஷ் என்ற இரட்டையர்கள் இயக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் ஸ்டிரைக் முடிந்தவுடன் ஆரம்பித்து, இவ்வருடம் நவம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் நட்டி நட்ராஜூக்கு ஜோடியாக ஒரு புதுமுகம் நடிக்கவுள்ளார்

From around the web